நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெடரர்-100

100-ஆவது ஏடிபி பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்.

News image
Updated On :2 மார்ச் 2019, 8:23 pm

சுஜித்குமார்

100-ஆவது ஏடிபி பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்.
37 வயதான பெடரர் சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் கடந்த 1981 ஆகஸ்ட். 8-ஆம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட பெடரர் சொந்த ஊரான பேஸலில் நடைபெற்ற போட்டியில் பந்தை எடுத்து தரும் சிறுவனாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முதல் ஒற்றையர் வெற்றி: கடந்த 2001-இல் மிலன் உள்ளரங்க போட்டியில் முதல் ஒற்றையர் பிரிவு வெற்றி பதிவு செய்தார். 
2003-இல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் முதன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். 2004, 2006, 2007-இல்  தொடர்ச்சியாக 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார் பெடரர். 
தற்போது 7ஆவது நிலையில் உள்ள அவர், 310 வாரங்கள் உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தை தக்க வைத்திருந்தார். 
20 கிராண்ட்ஸ்லாம், ஒலிம்பிக் தங்கம்: அவரது வெற்றிப் பட்டியலில் 8 விம்பிள்டன், 6 ஆஸ்திரேலிய ஓபன், 5 முறை தொடர்ச்சியாக யுஎஸ் ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன் பட்டங்களும் இதில் அடங்கும். 30 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையும் அவர் வசம் உள்ளது. மேலும் 6 ஏடிபி பைனல்ஸ், 27 ஏடிபி வேர்ல்ட் டூர் மாஸ்டர்ஸ் 1000, 21 ஏடிபி வேர்ல்ட் டூர் 500 பட்டங்களையும் வென்றுள்ளார்.
2017, 2018 ஆண்டுகளில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். 2018-ஆஸி ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதின் மூலம் 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் உலகின் நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பெற்றார். 
100-ஆவது பட்டம்: தனது 20 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் 100-ஆவது பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். துபையில் நடைபெற்ற ஏடிபி போட்டி இறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் அவர் 6-2, 6-2 என்ற நேர்செட்களில் பி.கோரிக்கை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரர் சிட்ஸிபாûஸ 6-4, 6-4 என நேர்செட்களில் வென்று தனது 100-ஆவது பட்டத்தை வென்ற சாதனையை நிகழ்த்தினார்.
இதற்கு முன்பு ஜிம்மி கானர்ஸ் மட்டுமே 109 பட்டங்களை வென்ற வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.