தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஐசிசி தரவரிசை: நெ.1 இடத்தை கோலியிடமிருந்து விரைவில் பறிக்கவுள்ள கேன் வில்லியம்சன்!

வங்கதேசத்துக்கு எதிராக 200 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில்...

News image
Updated On :4 மார்ச் 2019, 10:55 am

எழில்

வங்கதேசத்துக்கு எதிராக 200 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-ம் பிடித்து விரைவில் விராட் கோலியை முந்த தயாராகிவிட்டார்.

தற்போது 915 புள்ளிகளுடன் கோலிக்கு அடுத்ததாக 2-ம் இடத்தில் உள்ளார் வில்லியம்சன். எனினும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேலும் இரு டெஸ்டுகள் விளையாடவுள்ளதால் விரைவில் கோலியைத் தாண்டிச் சென்று வில்லியம்சன் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி, உலகக் கோப்பைக்குப் பிறகே டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதனால் அவரால் தற்போது வில்லியம்சனுடன் போட்டியிடமுடியாது. 
 
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டுக்கு முன்பு, 897 புள்ளிகள் வைத்திருந்த வில்லியம்சன், இரட்டைச் சதத்தின் மூலம் தற்போது முதலிடத்தைப் பிடிக்கும் நிலையில் உள்ளார். 2015-ம் வருடம் சிறிது காலம் நெ.1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக அவர் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.