தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சச்சினின் சதங்களை நெருங்கும் விராட் கோலி: 40-வது சதம் நிகழ்த்திய சாதனைகள்!

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து மகத்தான பேட்ஸ்மேனாக விளங்கும் விராட் கோலி...

News image
Updated On :9 மார்ச் 2019, 5:28 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதமெடுத்து அசத்தியுள்ளார். இது அவருடைய 40-வது ஒருநாள் சதம்.

107 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. இது அவருடைய 40-வது ஒருநாள் சதம். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து மகத்தான பேட்ஸ்மேனாக விளங்கும் விராட் கோலி, 216 இன்னிங்ஸில் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார். அதிக ஒருநாள் சதங்கள் அடித்த பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்திலும் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். விராட் கோலி அடித்த 40-வது சதம் உண்டாக்கிய சாதனைகள்:

விராட் கோலியின் சதம்...

40-வது ஒருநாள் சதம் 
65-வது சர்வதேச சதம் 
18-வது, ஒருநாள் கேப்டனாக 
36-வது, கேப்டனாக அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் 

அதிக ஒருநாள் சதங்கள் 

49 சச்சின் டெண்டுல்கர் (452 இன்னிங்ஸ்) 
40 விராட் கோலி (216 இன்னிங்ஸ்) 
30 ரிக்கி பாண்டிங் (365 இன்னிங்ஸ்) 

விராட் கோலியின் 40 ஒருநாள் சதங்கள்

8 vs இலங்கை 
7 vs மே.இ, ஆஸ்திரேலியா 
5 vs நியூஸிலாந்து 
4 vs தென் ஆப்பிரிக்கா 
3 vs இங்கிலாந்து, வங்கதேசம் 
2 vs பாகிஸ்தான் 
1 vs ஜிம்பாப்வே

இந்தியாவில் விராட் கோலியின் கடைசி 50+ ஸ்கோர்கள்

121 113 140 157* 107 116

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள்

9 சச்சின் டெண்டுல்கர் (70 இன்னிங்ஸ்) 
7 விராட் கோலி (31 இன்னிங்ஸ்) 
7 ரோஹித் சர்மா (33 இன்னிங்ஸ்) 

* மூன்று வெவ்வேறு அணிகளுடன் 7 அல்லது அதற்கும் அதிகமான ஒருநாள் சதங்கள் எடுத்த ஒரே வீரர் - விராட் கோலி; vs இலங்கை (8), vs மே.இ. அணி (7), vs ஆஸ்திரேலியா (7) 

ஒருநாள் கிரிக்கெட்டில் 1000-க்கும் அதிகமான பவுண்டரிகள் அடித்த இந்திய வீரர்கள் 

சச்சின், கங்குலி, சேவாக், விராட் கோலி.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.