அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தோனிக்கு ஓய்வு: கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்!

கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிஷப் பந்த்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:20 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸி., 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் கோலியின் சதமும் வீணானது. 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 4ஆவது ஒரு நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மொஹலியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிஷப் பந்த் கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார். பேட்டிங்கிலும் அவர் திறமையை நிரூபித்தால் உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.