வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்குக் காயம் ஏற்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 3-வது டெஸ்டிலிருந்து விலகவுள்ளார்.
2-வது டெஸ்டில் வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் வில்லியம்சனுக்குக் காயம் ஏற்பட்டது. நான்காம் நாளன்று பேட்டிங் செய்தபோது அவர் அசெளகரியத்தில் இருந்தார். இதையடுத்து எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் தோள்பட்டைக் காயம் உறுதியானது.
சனிக்கிழமையன்று மூன்றாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளதால் உலகக் கோப்பையை முன்னிட்டு வில்லியம்சன் 3-வது டெஸ்டில் இடம்பெறமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
வங்கதேசத் தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்குக் கிளம்பத் தயாராக இருந்தார் வில்லியம்சன். கடந்த வருடம் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தார். அந்த அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது. இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. எனினும் இதுகுறித்த உறுதியான தகவல் வரும் நாள்களில் தான் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
திமுக அரசின் அலட்சியத்திற்கு ஏழை மக்கள் பலியாக வேண்டுமா? நயினார் நாகேந்திரன் கேள்வி

வார பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

