கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஐ.பி.எல் போட்டிகளில் 300 சிக்ஸர்கள்!: அபார சாதனை படைத்த உயர்ந்த வீரர் 

ஐ.பி.எல் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்தவர் என்ற அபார சாதனையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் படைத்துள்ளார்.  

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:01 pm IST

சென்னை: ஐ.பி.எல் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்தவர் என்ற அபார சாதனையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் படைத்துள்ளார்.  

ஐ.பி.எல் போட்டிகளின் 12-ஆவது சீசன் கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் விளையாடி வருகிறார்.

இதற்கு முன்னதாக அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சனியன்று மாலை மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப்  போட்டியில் கிறிஸ் கெயில் 24 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இப்போட்டியில் அவர் அடித்த 4 சிக்சர்களுடன் அவர் ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 302 சிக்சர்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 115 போட்டிகளில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்ததாக 192 சிக்சர்களுடன் ஏபி டி வில்லியர்ஸ்  இரண்டாவது இடத்திலும், 185 சிக்சர்களுடன் எம்.எஸ்.தோனி மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.