நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் சென்னையில் இன்று தொடக்கம்

இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று  சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை-மும்பை அணிகள் மோதும் குவாலிபையர்-1 ஆட்டத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :6 மே 2019, 11:58 pm

சுஜித்குமார்


இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று  சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை-மும்பை அணிகள் மோதும் குவாலிபையர்-1 ஆட்டத்துடன் தொடங்குகிறது.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் 2019 சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலா 8 அணிகளும் 14 ஆட்டங்களில் விளையாடின. இதில் முதலிடம் பெற்ற மும்பை, இரண்டாவது இடத்துடன் சென்னை, மூன்றாவது இடத்துடன் தில்லி, நான்காம் இடத்துடன் ஹைதராபாத் ஆகியோர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கடைசி இடத்தையே பெற முடிந்தது.
மும்பையிடம் வீழ்ந்ததால், கொல்கத்தா பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதை விட நல்ல ரன் விகிதம் கொண்ட ஹைதராபாத் தகுதி பெற்றது. தில்லி கேபிடல்ஸ் அணியுடன் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதுகிறது ஹைதராபாத்.
4-ஆவது பட்ட முனைப்பில் சென்னை-மும்பை
குவாலிபையர்--1-இல் மோதவுள்ள சென்னை--மும்பை அணிகள் தங்களது நான்காவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல காத்துள்ளன. அதே நேரத்தில் தில்லி அணி கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு பின் தற்போது தான் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. தொடர்ந்து 4-ஆவது முறையாக பிளே ஆஃபில் நுழைந்துள்ள ஹைதராபாத் 2-ஆவது பட்டத்தை வெல்ல காத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி 7 வெற்றிகளை குவித்தது. மும்பைக்கு எதிராக 
குவாலிபையர்-1 ஆட்டத்தில் சொந்த மைதானம் என்ற பெரிய பலத்தோடு களமிறங்குகிறது சென்னை. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.