மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பெண்கள் குறித்துத் தவறாகப் பேச மாட்டார்: கம்பீருக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு!

எனக்கு அவரைப் பற்றி நன்குத் தெரியும். அவரால் பெண்கள் குறித்துத் தவறாகப் பேசவே முடியாது...

News image
Updated On :10 மே 2019, 7:00 am

எழில்

கிழக்கு தில்லியில் பாஜக சார்பில் பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷி போட்டியிடுகிறார். 

வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த துணைமுதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவருமான மணீஷ் சிசோடியா, அதிஷி ஆகியோர், "கிழக்கு தில்லியில் அதிஷியை மிக மோசமான வகையில் விமர்சிக்கும் துண்டுப் பிரசுரங்கள் பாஜகவால் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த துண்டுப் பிரசுரங்களை கௌதம் கம்பீரே விநியோகித்துள்ளார்' என்றனர். அப்போது அதிஷி கண்ணீர் விட்டு அழுதார். இந்நிலையில், இது தொடர்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில் "கௌதம் கம்பீர் இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போவார் என நினைக்கவில்லை. இப்படியான மனநிலை உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பெண்கள் அவர்களிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்?' என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது சுட்டுரையில் கௌதம் கம்பீர் தெரிவித்திருப்பதாவது: தேர்தல் வெற்றிக்காக சொந்தக் கட்சிப் பெண்ணின் கண்ணியத்தை சிதைக்கும் உங்களது நடவடிக்கையை வெறுக்கிறேன் கேஜரிவால். உங்களுடைய கட்சிச் சின்னமான துடைப்பத்தைக் கொண்டு உங்களது அழுக்கான மனதை யாராவது சுத்தம் செய்ய வேண்டும். நான்தான் இந்த துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தேன் என இவர்கள் நிரூபித்தால், நான் எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். நிரூபிக்காவிட்டால், கேஜரிவால் அரசியலில் இருந்து விலகுவாரா? கேஜரிவால் போன்ற ஒருவர் முதல்வராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சர்ச்சையில் கெளதம் கம்பீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

கெளதம் கம்பீர் குறித்த நேற்றைய நிகழ்வுகள் அதிர்ச்சியூட்டுகின்றன. எனக்கு அவரைப் பற்றி நன்குத் தெரியும். அவரால் பெண்கள் குறித்துத் தவறாகப் பேசவே முடியாது. அவர் இந்தத் தேர்தலில் ஜெயிக்கிறாரோ, தோற்கிறாரோ அது வேறு விஷயம். இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர் என்று கம்பீர் குறித்துக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.