ஓய்வுக்குப் பிறகு...: ரகசியத்தை வெளிப்படுத்திய தோனி! (விடியோ)
தோனி இடம்பெற்றுள்ள விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது...


தோனி இடம்பெற்றுள்ள விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அதில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலோடு உள்ள தோனி, சில நிமிடங்கள் பேசுகிறார்.
என் வாழ்வின் ரகசியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். சிறுவயது முதல் ஓவியக் கலைஞனாக வர வேண்டும் என்றுதான் விரும்பினேன். நான் நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டேன். எனவே தற்போது சில பெயிண்டிங்குகளை உருவாக்கியுள்ளேன். இவற்றை வைத்து ஓவியக் கண்காட்சி ஒன்றை தொடங்கவுள்ளேன். இதைப் பார்த்துவிட்டு ஏதாவது அறிவுரை கூற விரும்பினால் கூறுங்கள் என்று பேசியபடி அவருடைய சில ஓவியங்களைக் காண்பிக்கிறார் தோனி.
ஆனால், அந்த ஓவியங்கள் மிகவும் அடிப்படையாகவும் அவர் இளம் வயதில் வரைந்தது போல உள்ளன. இந்த விடியோவைப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...