பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டேன்: கிறிஸ் கெயில் அறிவிப்பு

இந்த ஓய்வின் மூலம் அடுத்த வருடம் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 

News image
Updated On :27 நவம்பர் 2019, 5:52 am

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தொடரில் நான் பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பிரபல வீரர் கிறிஸ் கெயில். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

நான், இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடவேண்டும் என மே.இ. தீவுகள் கிரிக்கெட் சங்கம் என்னைக் கேட்டுக்கொண்டது. ஆனால் நான் விளையாடப் போவதில்லை. இளைஞர்களுடன் இணைந்து நான் விளையாட வேண்டும் என விருப்பப்பட்டார்கள். ஆனால், இந்த வருடம் நான் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளப் போகிறேன். இந்தியா தொடர் மட்டுமல்லாமல் பிக் பேஷ் லீக், பிபிஎல் டி20 போட்டி ஆகியவற்றிலும் விளையாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் எம்எஸ்எல் டி20 போட்டியில் 6 இன்னிங்ஸில் 101 ரன்கள் மட்டுமே எடுத்தார் கெயில். இதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த ஓய்வின் மூலம் அடுத்த வருடம் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.