பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறுகிறாரா தோனி?: பதில் அளித்த சிஎஸ்கே நிர்வாகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு அதன் கேப்டன் தோனி வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு...

News image
Updated On :28 நவம்பர் 2019, 7:26 am

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு அதன் கேப்டன் தோனி வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு சிஎஸ்கே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

அடுத்த வருட ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலகி மீண்டும் ஏலத்தில் பங்கேற்க தோனி விருப்பம் தெரிவித்துள்ளார் என நேற்று செய்திகள் வெளியாகின. 2021 ஐபிஎல் ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்டு மூலமாக குறைந்த தொகைக்குத் தன்னைத் தேர்வு செய்யும்படி சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் ஏலத்தில் அதிகத் தொகையுடன் களமிறங்கி மேலும் வீரர்கள் சிலரை சிஎஸ்கே அணியால் தேர்வு செய்ய முடியும் என்பதால் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார் தோனி என்று வெளியான செய்திகளைப் படித்து சிஎஸ்கே ரசிகர்கள் குழப்பம் அடைந்தார்கள். 

அதேசமயம், தோனி இல்லாத சிஎஸ்கே-வா, இது எப்படிச் சாத்தியம் எனப் பலரும் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் இதற்கான பதிலை ட்விட்டர் வழியாகத் தெரிவித்துள்ளது. இல்லை. நாட்டுக்கு இது தெரியும் என ஊடகம் ஒன்றுக்கு அளித்த பதிலில் இந்த விவகாரம் குறித்துத் தெளிவான பதிலை அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.