முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குக் கடந்த மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து, தற்போது மைதானத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளார் பாண்டியா. அறுவை சிகிச்சை முடிந்து, குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஓய்வுக்குப் பிறகே மீண்டும் சர்வதேச ஆட்டங்களில் பாண்டியா பங்கேற்பார் என முதலில் சொல்லப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மைதானத்துக்குத் திரும்பி பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் பாண்டியா. இங்கு வந்து நீண்ட நாளாகிவிட்டது. மைதானத்துக்குத் திரும்புவதை விடவும் வேறு நல்ல உணர்வு கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் விதமாகப் பயிற்சிகள் எடுக்கும் விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


