பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பகலிரவு டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்தார் ஆஸியின் டேவிட் வார்னர்!

ரசிகர்களின் எதிர்பார்த்தபடி, 389 பந்துகளில் முச்சதம் எடுத்தார் வார்னர்... 

News image
Updated On :30 நவம்பர் 2019, 7:22 am

அடிலெய்டில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்து அசத்தியுள்ளார் ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர்.

2-வது டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் ஆஸி. அணி, 73 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. வார்னர் 166, லபுசானே 126 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்றும் பாகிஸ்தான் பந்துவீச்சை ஆஸி. பேட்ஸ்மேன்கள் விளாசினார்கள். எனினும் லபுசானே, 162 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த ஸ்மித், 36 ரன்களில் ஷஹீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இன்றைய நாள் டேவிட் வார்னருக்கு விசேஷமாக அமைந்தது. 260 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்தார் வார்னர். இன்று ஆஸி. வீரர்கள் விரைவாக ரன்கள் குவித்ததால் முதல் 17 ஓவர்களிலேயே 100 ரன்கள் கிடைத்தன. பிறகு 330 பந்துகளில் 250 ரன்களை எட்டினார் வார்னர். இதையடுத்து ரசிகர்கள் அவருடைய முச்சதத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். 2-ம் நாளின் முதல் பகுதியின் முடிவில் 108 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி. 

ரசிகர்களின் எதிர்பார்த்தபடி, 389 பந்துகளில் முச்சதம் எடுத்தார் வார்னர். முச்சதம் எடுத்த 7-வது ஆஸி. பேட்ஸ்மேன் என்கிற பெருமையைப் பெற்றார். 2016-ல் சென்னையில் இந்தியாவின் கருண் நாயர், இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கிடைத்துள்ள முச்சதம் இது. 

ஆஸ்திரேலிய அணி 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தார் ஆஸி. கேப்டன் டிம் பெயின். வார்னர் 335, வேட் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். வார்னர், லாராவின் சாதனையான 400 ரன்களைத் தாண்டுவார் என ரசிகர்கள் விருப்பப்பட்டார்கள். எனினும் அணியின் நலனை முன்னிறுத்தி டிக்ளேர் செய்துள்ளார் ஆஸி. கேப்டன். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.