விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹார்திக் பாண்டியா

முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2019, 7:00 am

எழில்

முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் சிகிச்சை பெறுவதற்காகச் சமீபத்தில் லண்டனுக்குச் சென்றார் பாண்டியா. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்தத் தகவலை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் பாண்டியா. குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஓய்வுக்குப் பிறகே மீண்டும் சர்வதேச ஆட்டங்களில் பாண்டியா பங்கேற்பார் எனத் தெரிகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.