ஆஸ்திரேலிய டி20 அணியில் அதிரடி மாற்றங்கள்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய டி20 அணியில் அதிரடி மாற்றங்கள்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஆஸ்திரேலிய டி20 அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றது. எனினும் அந்த அணியில் விளையாடிய ஏழு பேர் மட்டுமே தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். அந்தத் தொடரில் விளையாடிய முக்கிய வீரர்களான டார்சி ஷார்ட், நாதன் கோல்டர் நைல், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக ஜேஸன் பெஹ்ரென்டார்ஃப் அணியில் இடம்பெறவில்லை. ஒருநாள் உலகக் கோப்பையில் மோசமாக விளையாடிய ஸ்டாய்னிஸ் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

2016 மார்ச் மாதத்துக்குப் பிறகு சர்வதேச டி20 அணியில் விளையாடாமல் உள்ள ஸ்மித், வார்னர் ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய டி20 அணிக்குத் திரும்பியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 27 முதல் தொடங்கிறது. அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 3 முதல் தொடங்குகிறது. இதன்பிறகு தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து மேலும் பல டி20 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. 

ஆஸ்திரேலிய டி20 அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் மெக்டர்மாட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், பில்லி ஸ்டேன்லேக், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் அகர், ஆண்ட்ரூ டை, டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com