விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

எனக்கும் கோபம் வரும், ஆனால் கட்டுப்படுத்திக் கொள்வேன்: தோனி

எல்லோரையும் எனக்கும் கோபம் வரும். ஆனால் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வேன் என தோனி கூறியுள்ளார்...

News image
Updated On :16 அக்டோபர் 2019, 12:24 pm

எழில்

எல்லோரையும் எனக்கும் கோபம் வரும். ஆனால் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வேன் என தோனி கூறியுள்ளார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நானும் எல்லோரையும் போலத்தான். ஆனால் மற்றவர்களை விடவும் என்னுடைய கோபத்தை நான் கட்டுப்படுத்திக்கொள்வேன். நானும் வெறுப்படைவேன். எனக்கும் கோபம் வரும், வருத்தப்படுவேன். ஆனால் இவற்றால் பயன் எதுவும் இருக்காது. 

உணர்ச்சிகளை விடவும் பிரச்னைக்கான தீர்வைத் தேடுவது தான் முக்கியம். அடுத்து என்ன திட்டமிடலாம், யாரை அடுத்ததாகப் பயன்படுத்தலாம் என யோசிக்கும்போது என்னுடைய உணர்ச்சிகளை நல்ல முறையில் கட்டுப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இரு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார் தோனி. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய விடுமுறையை நவம்பர் மாதம் வரை தோனி நீட்டித்துள்ளார். இதனால் விஜய் ஹசாரே கோப்பை, வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் ஆகிய போட்டிகளில் தோனி பங்கேற்கப் போவதில்லை என்று தெரிகிறது. டிசம்பர் மாதம் இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதனால் இந்தத் தொடரில்தான் அடுத்ததாக தோனி பங்கேற்பார் எனத் தெரிகிறது. கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். தற்போது அவர் ஆறு மாத ஓய்வுக்குப் பிறகு டிசம்பரில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.