என்னை பாக். பயிற்சியாளராக்கினால் அதைக் கூறுவேன்: ரோஹித் ஷர்மா

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் சதம் விளாசி ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா,
என்னை பாக். பயிற்சியாளராக்கினால் அதைக் கூறுவேன்: ரோஹித் ஷர்மா
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் சதம் விளாசி ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த போட்டி நடைபெறாதது ஏமாற்றமளித்தது. எனவே இப்போட்டியில் கண்டிப்பாக களமிறங்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். அது நடைபெற்றது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்தோம், அதுவும் நிறைவேறியது. 

இந்தப் போட்டியில் எனது ஆட்டம் திருப்திகரமாக இருந்தது. நான் இரட்டைச் சதம் எடுக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. அதுபோன்று தான் இந்த ஆட்டத்திலும் அதுகுறித்து கருதவில்லை. எப்போதுமே என்னால் முடிந்தவரை ஆட்டமிழக்காமல் தொடரவே திட்டமிடுவேன். 

ஸ்கோரை உயர்த்த சரியான சந்தர்ப்பம் அமைந்த போது நான் ஆட்டமிழந்துவிட்டேன், அது எனக்கு மன வருத்தமளித்தது. ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர் என்று தெரிவித்தார். 

அப்போது செய்தியாளர் ஒருவர், நீண்டகாலமாக பாகிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. எனவே சக வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நீங்கள் பரிந்துரைப்பது என்ன? என்று கேள்வியெழுப்பிதற்கு,

இதை நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் தெரிவித்திருப்பேன். இப்போது எதைக் கூற முடியும் என்று ரோஹித் ஷர்மா பதிலளித்தார். இதனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சிரிப்பலையில் ஆழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com