லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கிரிக்கெட்டின் லெஜண்ட் தோனி: கைகொடுத்த கேப்டன் கோலி

கிரிக்கெட் விளையாட்டின் லெஜண்ட் மகேந்திர சிங் தோனி என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். 

Published On :31 ஜனவரி 2024, 2:52 pm IST

கிரிக்கெட் விளையாட்டின் லெஜண்ட் மகேந்திர சிங் தோனி என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். 

2019 உலகக் கோப்பைத் தொடரில் தோனியின் ஆட்டம் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடைசி கட்டத்தில் அவர் ரன்குவிக்கத் தடுமாறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுதொடர்பாக விராட் கோலி கூறுகையில்,

களத்தில் எதைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று தோனிக்கு நன்கு தெரியும். கிரிக்கெட்டை சரியாக கணித்து விளையாடுபவர். இது நாம் அனைவரும் அறிந்தது தான். அவர் கிரிக்கெட் விளையாட்டின் லெஜண்ட். சரியாக விளையாடாதபோது விமர்சனங்கள் வருவது சகஜம்தான். 

இந்திய அணிக்கு பல வெற்றிகளை தோனி பெற்றுத்தந்திருக்கிறார். எனவே அணியின் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு. எப்போது எவ்வளவு ரன்கள் தேவைப்பட்டாலும் அதை அடித்துக்கொடுப்பார். தோனியின் அனுபவம் 10-ல் 8 முறை வெற்றிகரமாக உதவியுள்ளது.

சிலருக்கு மட்டுமே அடுத்த என்ன நடக்கும் என்று கணிக்கும் திறன் இருக்கும். அதுபோன்ற ஒரு வீரர் தான் தோனி. கிரிக்கெட் குறித்த முழு புரிதலும் அவருக்கு உண்டு. ஒவ்வொரு ஆட்டத்திலும் இத்தனை ரன்கள் போதுமானது என்று கூறினால் அது நிச்சயம் சரியாகவே அமைந்தது உண்டு என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.