தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் ரூபா குருநாத்! (படங்கள் & விடியோ)

ரூபா குருநாத்தின் டிஎன்சிஏ-வின் தலைவராகப் பொறுப்பேற்றதன் புகைப்படங்கள் மற்றும் விடியோவை டிஎன்சிஏ வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :26 செப்டம்பர் 2019, 8:59 am

எழில்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் மாநில சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும் என சிஓஏ அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று நடைபெற்ற டிஎன்சிஏ ஆண்டு நிர்வாகக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. போட்டியின்றித் தேர்வான ரூபா குருநாத், பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

டிஎன்சிஏ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரூபாவின் கணவர் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டார். கடந்த 2013 ஐபிஎல் சீசனில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் புகார் காரணமாக அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது.

ரூபா குருநாத்தின் டிஎன்சிஏ-வின் தலைவராகப் பொறுப்பேற்றதன் புகைப்படங்கள் மற்றும் விடியோவை டிஎன்சிஏ வெளியிட்டுள்ளது.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.