தற்போதைய சூழலில் காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார் என சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் பற்றி ஒரு பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
ரசிகர்களின் உடல்நலன் மிகவும் முக்கியம். சூழல் ஏற்பட்டால், காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார். ரசிகர்களின் ஆதரவு விளையாடும்போது கிடைக்காது தான். ஆனால் காலி மைதானத்தில் ஐபிஎல் நடைபெற்றால் குறைந்தபட்சம் அவர்கள் தொலைக்காட்சியிலாவது கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பார்கள்.
வீரர்களின் நலனில் நாம் அக்கறை செலுத்தவேண்டும். கிரிக்கெட் மைதானம், வீரர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்தும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். நிலைமை சரியான பிறகுதான் ஐபிஎல் போட்டி நடத்தப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

