ராஞ்சி பண்ணை வீட்டுக்குள் மகளுடன் பைக்கில் வலம் வரும் தோனி (விடியோ)
ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மகளுடன் பைக்கில் செல்லும் விடியோவை தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ளார்.


ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் மகளுடன் ஜாலியாகப் பொழுதைக் கழித்து வருகிறார் எம்.எஸ். தோனி.
ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மகளுடன் பைக்கில் செல்லும் விடியோவை தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை சென்னை சூப்பர் கிங்ஸும் ட்வீட் செய்துள்ளது.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.
கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. 2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன ஆகும் என்பதற்குப் பலரும் பலவிதமான கணிப்புகளை அளித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...