இங்கிலாந்துக்கு 111 ரன்கள் தேவை, பாகிஸ்தானுக்கு 5 விக்கெட்டுகள் தேவை: வெற்றி யாருக்கு?

​பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு 111 ரன்கள் தேவை, பாகிஸ்தானுக்கு 5 விக்கெட்டுகள் தேவை: வெற்றி யாருக்கு?


பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 326 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 107 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 169 ரன்களுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. 4-ம் நாள் ஆட்டம் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 1 விக்கெட்டை இழந்து 55 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளை வரையிலான விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

உணவு இடைவேளைக்குப் பிறகும் பாட்னர்ஷிப்பைத் தொடர்ந்த ரூட் மற்றும் சிப்ளே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில், யாசிர் ஷா சுழலில் சிப்ளே (36 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள், இங்கிலாந்துக்கு நெருக்கடி தரத் தொடங்கினர். இதன் விளைவாக ரூட் (42 ரன்கள்), ஸ்டோக்ஸ் (9 ரன்கள்), போப் (7 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இங்கிலாந்து 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு வந்தது.

இதையடுத்து, பட்லர் மற்றும் வோக்ஸ் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியைத் தர துரிதமாக ரன் குவிக்கத் தொடங்கினார். இதற்குப் பலனாக இந்த இணை விக்கெட்டைப் பறிகொடுக்காமல் 49 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்தது. இதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது. 

தற்போதைய நிலையில் வெற்றி வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் சரிசமமாக உள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 111 ரன்கள் தேவை, பாகிஸ்தான் வெற்றி பெற 5 விக்கெட்டுகள் தேவை.

இதனால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com