அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனாவிலிருந்து மீண்டு வந்தார் கருண் நாயர்: ஐபிஎல் போட்டியில் பங்கேற்பு!

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார்...

News image
Updated On :13 ஆகஸ்ட் 2020, 5:25 am

DIN

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார். 

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கருண் நாயர் கடந்த இரு வாரங்களாகத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 8 அன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள கருண் நாயர் அடுத்ததாக மூன்று கரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்பிறகு தான் அவரால் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல முடியும். கரோனா இல்லை என்று உறுதியான வீரர்கள் மட்டுமே ஆகஸ்ட் 20 அன்று துபை செல்லவுள்ளார்கள். 

2018, 2019 ஐபிஎல் போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் கருண் நாயர். 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பவர்களில் கரோனாவால் பாதிக்கப்படும் 2-வது நபராக கருண் நாயர் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.