லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஓய்விலிருந்து வெளியே வரவேண்டும்: யுவ்ராஜ் சிங்குக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை

மீண்டும் விளையாட வந்து, ஆலோசகராகவும் செயல்பட்டால் பஞ்சாப் கிரிக்கெட் அணிக்கு...

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 12:09 pm

DIN

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை உள்பட பல்வேறு வெற்றிகளுக்கு வித்திட்ட யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஒரு வருடத்துக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

304 ஒருநாள் ஆட்டங்கள் விளையாடி 8701 ரன்களும் 40 டெஸ்டுகளில் விளையாடி 1900 ரன்களும் 58 டி20 ஆட்டங்களில் விளையாடி 1177 ரன்களும் யுவ்ராஜ் சிங் எடுத்துள்ளார். டெஸ்டில் 3 சதங்களும் ஒருநாள் ஆட்டங்களில் 14 சதங்களும் எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஓய்விலிருந்து யுவ்ராஜ் சிங் வெளியே வரவேண்டும் என பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் புனீத் பாலி கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஓய்விலிருந்து வெளியே வரவேண்டும் என ஆறு நாள்களுக்கு முன்பு யுவ்ராஜ் சிங்கிடம் கூறினோம். இன்னும் அவர் பதிலளிக்கவில்லை. அவர் மீண்டும் விளையாட வந்து, ஆலோசகராகவும் செயல்பட்டால் பஞ்சாப் கிரிக்கெட் அணிக்கு அது நல்லவிதமாக அமையும். எல்லா வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாட கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாட முடியும் என அவர் சொன்னாலும் அது எங்களுக்குச் சம்மதம் தான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.