குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு கரோனா
குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.


குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சரிதா தேவியின் கணவர் தொயிபா கூறியதாவது:
நானும் சரிதா தேவியும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். கோவிட் மையத்துக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வோம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவது இங்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிமிடம் வரை எங்களிடம் கரோனா அறிகுறிகள் இல்லை. எங்களிடம் தொடர்பு கொண்டவர்களிடம் இத்தகவலை கூறியுள்ளோம். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
தேசியக் குத்துச்சண்டைப் பயிற்சி முகாம், பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் சரிதா தேவி பங்கேற்கவில்லை. தற்போது மணிப்பூரில் அவர் பயிற்சி பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...