தோனி ஒப்புக்கொள்ளா விட்டாலும் ஒரு பாராட்டு விழா நிச்சயம்: பிசிசிஐ தரப்பு
தோனி ஒப்புக்கொள்ளா விட்டாலும் அவருக்கு ஒரு பாராட்டு விழா முறைப்படி நடத்தப்படும் என...


தோனி ஒப்புக்கொள்ளா விட்டாலும் அவருக்கு ஒரு பாராட்டு விழா முறைப்படி நடத்தப்படும் என பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். ஐபிஎல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார் தோனி.
இந்நிலையில் பிரியாவிடை ஆட்டம் ஒன்றில் தோனி விளையாடவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி பிசிசிஐ அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தோனிக்குப் பிரியாவிடை ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். யாரும் எண்ணாத நேரத்தில் ஓய்வு அறிவிப்பை தோனி வெளியிட்டு விட்டார். இப்போது சர்வதேச ஆட்டம் எதிலும் இந்திய அணி விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியின்போது அவரிடம் இதுபற்றி பேசவேண்டும். நாட்டுக்காக நிறைய பங்களிப்பு அளித்துள்ளார். அதற்குரிய மரியாதை தரப்படும்.
அவர் ஒப்புக்கொள்கிறாரோ இல்லையோ நிச்சயம் ஒரு பாராட்டு விழா முறைப்படி நடத்தப்படும். அவரை நாங்கள் கெளரவப்படுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...