சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் 237 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை!

சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது...
சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் 237 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை!

சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்போட்டியின் இயக்குநர் மைக்கேல் ஹால் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் தொடங்கிய 2020 சிபிஎல் போட்டி, டிரினிடாட் & டொபாகோ-வில் உள்ள இரு மைதானங்களில் 33 ஆட்டங்களாக நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று செப்டம்பர் 10-ல் நடைபெறுகிறது.  மொத்தம் 23 நாள்களுக்குத் திகட்ட திகட்ட அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். சிபிஎல் ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் ஃபேன்கோட் செயலியிலும் பார்க்கலாம்.

சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என 237 பேருக்கு நான்கு முறை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அனைவருக்கும் கரோனா இல்லை எனப் பரிசோதனைகளில் முடிவாகியுள்ளதாக சிபிஎல் போட்டியின் இயக்குநர் மைக்கேல் ஹால் கூறியுள்ளார். 

சிபிஎல் போட்டியில் பங்கேற்க உறுதியளித்த வீரர்களில் மூவர் மட்டும் கரோனா காரணமாகப் பங்கேற்கவில்லை. ஒரு வீரருக்கு கரோனா உறுதியான நிலையில் அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட மேலும் இரு வீரர்களும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். அதேபோல ஒரு பயிற்சியாளருக்கும் கரோனா தொற்று உறுதியானதால் டிரினிடாடுக்கு வரவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடப் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.  

சொந்தக் காரணங்களுக்காக இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலிருந்து விலகுவதாக கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார். இது சிபிஎல் போட்டிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்படுகிறது. இப்போட்டியில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்தவர் அவர்தான். 48 வயது இந்திய வீரரான பிரவீன் டாம்பே இந்த வருட சிபிஎல் போட்டியில் விளையாடுகிறார். அவரை டிகேஆர் அணி தேர்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com