பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆஸி. வீரர் ஒயிட் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. வீரர் கேம்ரூன் ஒயிட் அறிவித்துள்ளார். 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2020, 6:01 am

DIN

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. வீரர் கேம்ரூன் ஒயிட் அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்டுகள், 91 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் ஒயிட் விளையாடியுள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 2 சதங்களும் 11 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காகக் கடைசியாக 2018-ல் விளையாடினார். 2002-ல் ஆஸ்திரேலிய அணி யு-19 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியின் கேப்டனாக இருந்தார். மேலும் அப்போட்டியில் அதிக ரன்களும் எடுத்து கவனம் ஈர்த்தார். 

இந்நிலையில் 37 வயதான ஒயிட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் சார்பாக பிரீமியர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளார். மேலும் பயிற்சியாளராகப் பணியாற்றவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.