ஐக்கிய அரபு அமீரகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐபிஎல் வீரர்கள்
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள வீரர்கள்...


ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள வீரர்கள் தற்போது ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் துபை மற்றும் அபுதாபிக்குச் சென்று சேர்ந்துள்ளார்கள். இதனால் அடுத்த ஏழு நாள்களுக்கு நட்சத்திர விடுதியில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து வீரர்களும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு வீரரும் அவருடைய அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது. உணவு உள்ளிட்ட அவர்களுக்குத் தேவையானவற்றை அறைக்கு வெளியே விடுதி ஊழியர்கள் வைத்துச் சென்றுவிடுவார்கள். எந்த ஒரு வீரரும் மற்ற வீரருடன் நேரில் பேச அனுமதி இல்லை. விடுதி ஊழியர்களும் வீரர்களின் அறைக்குள் செல்ல முடியாது.
ஒரு வாரம் கழித்து அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் கரோனா இல்லை என்று உறுதியான பிறகு மற்ற வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளலாம். வீரர்கள், தங்களுடைய தனிமை வாழ்க்கை குறித்த தகவல்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...