தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பென் ஸ்டோக்ஸ் தந்தைக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு!

பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 5:33 am

DIN

பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. இதன்பிறகு, சொந்தக் காரணங்களுக்காக நியூசிலாந்து செல்ல வேண்டியிருப்பதால் கடைசி இரு டெஸ்டுகளில் இருந்து ஸ்டோக்ஸ் விலகினார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ஸ்டோக்ஸின் தந்தைக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தந்தையின் சிகிச்சையின்போது அருகில் இருப்பதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாதியில் விலகியுள்ளார் ஸ்டோக்ஸ். இதுபற்றி ஒரு பேட்டியில் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

என் தந்தையின் உடல்நிலை பற்றி அறிந்த பிறகு என்னால் ஒரு வாரம் சரியாகத் தூங்க முடியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சரியான மனநிலையில் இல்லாததால் அணியிலிருந்து விலகியது சரியான முடிவு என்றார்.

புற்றுநோய் பாதிப்பு பற்றி ஸ்டோக்ஸின் தந்தையும் முன்னாள் ரக்பி வீரருமான ஜெராட் ஸ்டோக்ஸ் ஒரு பேட்டியில் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 4 டெஸ்டுகளில் விளையாடியது. என் மகனின் ஆட்டத்தைக் காண அங்குச் சென்றிருந்தேன். அப்போது தான் எனக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நியூசிலாந்துக்குத் திரும்பினேன். கடந்த ஜனவரி மாதம் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்தார்கள். இது எப்படி உருவானது என யாருக்கும் தெரியவில்லை. என் வாழ்க்கை முழுக்க பலமுறை தலையில் அடிபட்டுள்ளது. அதனால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.