புவனேஸ்வர் குமார் காயம்: தற்போதைய நிலவரம் என்ன?

இந்தியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் பங்கேற்பார்...
புவனேஸ்வர் குமார் காயம்: தற்போதைய நிலவரம் என்ன?

ஐபிஎல் போட்டியில் காயமடைந்து வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பெங்களூரில் உள்ள என்சிஏ-வில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நான்கு ஆட்டங்கள் மட்டுமே ஆடியுள்ள நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.  

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களிலும் புவனேஸ்வரால் பங்கேற்க முடியாமல் போனது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் புவனேஸ்வர் குமார். முழு உடற்தகுதியை அடைவதற்காக ஜனவரி வரை என்சிஏவில் அவர் தங்கியிருப்பார் என்று அறியப்படுகிறது.

இதனால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com