பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னைக்கு இரு டெஸ்டுகள்: இந்தியா - இங்கிலாந்து தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் நடைபெறுகின்றன.

News image
Updated On :10 டிசம்பர் 2020, 11:02 am

DIN

இந்தியா - இங்கிலாந்து தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து தொடர் முழுக்க சென்னை, ஆமதாபாத், புணே ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் இருக்க வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடர், சென்னை மற்றும் ஆமதாபாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இரு நகரங்களும் தலா இரு டெஸ்டுகளை நடத்துகின்றன. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் முழுக்க ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. அதேபோல மூன்று ஒருநாள் ஆட்டங்களும் புணேவில் நடைபெறுகின்றன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆமதாபாத்தில் மோடேரா மைதானம் கட்டப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர முடியும்.

டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5, 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13 அன்று தொடங்குகின்றன. 3-வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் பிப்ரவரி 24 அன்று தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் ஆமதாபாத்தில் மார்ச் 4 அன்று தொடங்குகிறது. 

ஆமதாபாத்தில் நடைபெறும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், மார்ச் 12 அன்று தொடங்கி மார்ச் 20-ல் முடிவடைகிறது. புணேவில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23-ல் தொடங்கி, மார்ச் 28-ல் முடிவடைகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் நடைபெற்றது. அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் டெஸ்ட் நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தலால் பல நகரங்களில் தொடரை நடத்த முடியாத காரணத்தால் சென்னைக்கு ஒரே தொடரில் இரு டெஸ்டுகள் கிடைத்துள்ளன.

இந்தியா - இங்கிலாந்து தொடர்: அட்டவணை

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட், சென்னை - பிப்ரவரி 5 - 9
2-வது டெஸ்ட், சென்னை - பிப்ரவரி 13 - 17
3-வது டெஸ்ட், ஆமதாபாத் - பிப்ரவரி 24 - 28
4-வது டெஸ்ட், ஆமதாபாத் - மார்ச் 4 - 8

டி20 தொடர் (ஆமதாபாத்)

முதல் டி20 - மார்ச் 12
2-வது டி20 - மார்ச் 14
3-வது டி20 - மார்ச் 16
4-வது டி20 - மார்ச் 18
5-வது டி20 - மார்ச் 20

ஒருநாள் தொடர் (புணே)

முதல் ஒருநாள் - மார்ச் 23
2-வது ஒருநாள் - மார்ச் 26
3-வது ஒருநாள் - மார்ச் 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.