சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இங்கிலாந்துடனான பகலிரவு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறும்: ஜெய் ஷா தகவல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட், பிப்ரவரி 24 அன்று ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என...

News image
படம் - twitter.com/BCCI
Updated On :10 டிசம்பர் 2020, 8:46 am

DIN

2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட், பிப்ரவரி 24 அன்று ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

குஜராத் கிரிக்கெட் அகாடமியின் உள்ளூர் அரங்கத்தை இன்று திறந்து வைத்த ஜெய் ஷா இத்தகவலை கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட், பிப்ரவரி 7 அன்று தொடங்கும். பகலிரவு டெஸ்ட் ஆட்டம் ஆமதாபாத் மோடேரா மைதானத்தில் பிப்ரவரி 24 அன்று நடைபெறும். ஐந்து டி20 ஆட்டங்களும் மோடேரா மைதானத்தில் நடைபெறும் என்றார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மோடேரா மைதானம் கட்டப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.