காதலியை மணந்தார் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி: படங்கள் & விடியோ
தனது காதலி நேஹாவைத் திருமணம் செய்துள்ளார் வருண்...


இந்திய அணிக்குச் சமீபத்தில் தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி, சிறப்பாகப் பந்துவீசியதால் இந்திய டி20 அணிக்குத் தேர்வானார் வருண் சக்ரவர்த்தி. எனினும் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தனது காதலி நேஹாவைத் திருமணம் செய்துள்ளார் வருண் சக்ரவர்த்தி. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.
வருண் சக்ரவர்த்தி திருமணம் பற்றிய தகவலை கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டு, புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சமூகவலைத்தளங்களில் வருண் - நேஹா திருமணப் புகைப்படங்களும் விடியோவும் வெளியாகியுள்ளன.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...