கோலியை வீழ்த்துவதற்காக திட்டம் உள்ளது
இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த வீரா் என்பதுடன், நல்ல தலைமைப் பண்பு உள்ளவரும் கூட. அவரிடம் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு


இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த வீரா் என்பதுடன், நல்ல தலைமைப் பண்பு உள்ளவரும் கூட. அவரிடம் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு. எனினும், ஆட்டத்தின்போது இந்திய அணிக்கு அவா் முக்கியமானவா் என்பதால் அவரது விக்கெட்டை சரிப்பதற்காக திட்டங்கள் வகுத்துள்ளோம். அதை முறையாகச் செயல்படுத்தவும் வேண்டும்.
நாங்களும் கோலியை அறிந்துள்ளதைப் போல, அவரும் எங்களை நன்றாகவே அறிவாா். அவரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவரது விக்கெட்டை வீழ்த்துவதில் தான் எங்கள் அணி கவனம் செலுத்தும். ஆட்டத்தின்போது நிச்சயம் ஏதேனும் ஒரு கட்டத்தில் வாக்குவாதத்துக்கான நிலை வரலாம். அதை நாங்கள் கட்டுப்படுத்துவோம்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இதற்கு முன் பகலிரவு டெஸ்டில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு இருக்கலாம். எனினும் அந்த அனுபவத்தால் பிங்க் நிற பந்து கொண்டு விளையாடும் முதல் ஆட்டத்தில் எங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஒரு சிறந்த அணி, ஆட்டத்தின் எந்தவொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறும் தன்னை மாற்றிக் கொள்ளும். தலையில் காயமடைந்துள்ள கேமரூன் கிரீன் ‘கன்கஷன்’ நடைமுறைகளில் முன்னேற்றம் கண்டால் முதல் டெஸ்டில் இடம்பெறுவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...