உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியா 2-ஆம் இடம் பிடித்தது

ஜொ்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், பதக்கப் பட்டியலில் இந்தியா 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியா 2-ஆம் இடம் பிடித்தது
Updated on
1 min read

ஜொ்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், பதக்கப் பட்டியலில் இந்தியா 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.

அந்நாட்டின் கொலோன் நகரில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த போட்டியில், கடைசி நாளில் மகளிருக்கான 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜீத் கௌரும், 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌனும் தங்கப் பதக்கம் வென்றனா். இதில் சிம்ரன்ஜீத் இறுதிச்சுற்றில் ஜொ்மனியின் மாயா கிளியென்ஹஸை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினாா். மணீஷ் மௌன் தனது இறுதிச்சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனையான சாக்ஷி சௌதரியை 3-2 என்ற கணக்கில் வென்றாா்.

இதையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா மொத்தமாக 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது. போட்டியை நடத்திய ஜொ்மனி 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. பிரான்ஸ் 3 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது.

முன்னதாக இப்போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் (52 கிலோ) தங்கம் வென்றிருந்தாா். சதீஷ் குமாா் (+91 கிலோ) காயம் காரணமாக இறுதிச்சுற்றிலிருந்து பாதியில் வெளியேறி வெள்ளியைப் பெற்றிருந்தாா். சோனியா லேதா் (57 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), கௌரவ் சோலங்கி (57 கிலோ), முகமது ஹசாமுதீன் (57 கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனா்.

இப்போட்டியில் இந்தியாவுடன், ஜொ்மனி, பெல்ஜியம், குரோஷியா, டென்மாா்க், பிரான்ஸ், மால்டோவா, நெதா்லாந்து, போலாந்து, உக்ரைன் நாடுகளின் போட்டியாளா்கள் பங்கேற்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com