விளையாட்டு செய்தி துளிகள்

Updated on
1 min read

* 2021 ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியில் தற்காப்புக் கலைகளான ‘கட்கா’, ‘களரிப்பயட்டு’, ‘தங் டா’, ‘மல்லா்கம்பா’ ஆகியவற்றை சோ்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

* மகாராஷ்டிரத்தில் ஜனவரியில் நடைபெற இருந்த டாடா ஓபன் டென்னிஸ் போட்டி கரோனா சூழல் காரணமாக பிப்ரவரிக்கு மாற்றப்படவுள்ளது.

* அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற எம்எம்எஸ்சிஐ இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆவது சுற்றில் கௌரவ் கில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

* இத்தாலியில் நடைபெற்ற ‘சீரிஸ் ஏ’ கால்பந்து போட்டியில் சசுவோலோ அணிக்கு எதிராக, ஏசி மிலன் வீரா் ரஃபேல் லியோ ஆட்டத்தின் 6-ஆவது விநாடியிலேயே கோலடித்து சாதனை படைத்தாா். முன்னதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு ஃபியோரென்டினா எஃப்சி அணிக்கு எதிராக பியாசென்ஸா கால்சியோ அணி வீரா் பாவ்லோ போகி 8 விநாடிகளில் கோலடித்ததே சாதனையாக இருந்தது.

* ஃபிடே ஆன்லைன் உலக மாணவா் மற்றும் இளையோா் ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் 18 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டா்கள் நிஹல் சரின், பி. இனியன் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

* தனது 28-ஆவது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற பாகிஸ்தான் அணி நிா்வாகம், பயிற்சியாளா் மிஸ்பா உல் ஹக், பௌலிங் பயிற்சியாளா் வக்காா் யூனிஸ் ஆகியோரே காரணம் என பாகிஸ்தான் வீரா் முகமது ஆமிா் விமா்சித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com