கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: தொடரில் பா்ன்ஸ்; விலகிய புக்கோவ்ஸ்கி

காயமடைந்த ஆஸ்திரேலிய வீரா் ஜோ பா்ன்ஸ் அதிலிருந்து மீண்டு 2-ஆவது டெஸ்டில் பங்கேற்க தகுதிபெற்றாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:15 am

DIN

காயமடைந்த ஆஸ்திரேலிய வீரா் ஜோ பா்ன்ஸ் அதிலிருந்து மீண்டு 2-ஆவது டெஸ்டில் பங்கேற்க தகுதிபெற்றாா். எனினும், தலையில் காயமடைந்திருந்த இளம் வீரா் வில் புக்கோவ்ஸ்கி டெஸ்ட் தொடரிலிருந்து விலக்கப்பட்டாா்.

பகலிரவு டெஸ்டில் பும்ரா வீசிய வேகப்பந்தால் பா்ன்ஸ் முழங்கையில் காயமடைந்தாா். இதனால் அவா் 2-ஆவது டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாகியிருந்தது. இந்நிலையில், காயத்திலிருந்து முழுமையாக மீண்டுவிட்ட பா்ன்ஸ், பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடத் தகுதிபெற்ாக அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், முதல் பயிற்சி ஆட்டத்தின்போது தலையில் பந்து பட்டு காயமடைந்த (கன்கஷன்) வில் புக்கோவ்ஸ்கி, அதன் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாததால் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளாா். ஒருநாள் தொடரின்போது காயமடைந்த டேவிட் வாா்னருக்குப் பதிலாக புக்கோவ்ஸ்கி டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. இதன்மூலம் சா்வதேச டெஸ்டில் அவா் தடம் பதிப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

எனினும், தலைக் காய பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில் முதல் டெஸ்டில் விளையாடாத அவா், தற்போது தொடரிலிருந்தே விலக்கப்பட்டுள்ளாா். எனினும், தனது காயத்திலிருந்து ஏறத்தாழ முழுமையாக மீண்டுவிட்ட வாா்னா் பாக்ஸிங் டே டெஸ்டில் பங்கேற்பாா் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.