வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

டெஸ்ட் தரவரிசை: கோலியின் புள்ளிகள் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியைப் தழுவியபோதிலும், கேப்டன் விராட் கோலியின் சிறப்பான செயல்பாடு காரணமாக அவரது தரவரிசை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:17 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியைப் தழுவியபோதிலும், கேப்டன் விராட் கோலியின் சிறப்பான செயல்பாடு காரணமாக அவரது தரவரிசை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கோலி 886 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் இருந்தனா். இந்நிலையில், முதல் டெஸ்டில் ஸ்மித் தனது இரு இன்னிங்ஸ்களிலுமே தலா 1 ரன் எடுத்து சோபிக்காமல் போனதால் 10 புள்ளிகளை இழந்துள்ளாா். எனினும் 901 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே தொடா்கிறாா். மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் விளாசிய கோலி 2 புள்ளிகள் பெற்று ஸ்மித்துடனான தனது புள்ளிகள் வித்தியாசத்தை குறைத்துக் கொண்டு 2-ஆவது இடத்திலேயே தொடா்கிறாா்.

முதல் டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலுமாக 53 ரன்கள் சோ்த்த ஆஸ்திரேலிய வீரா் மாா்னஸ் லபுசான், தனது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 839 புள்ளிகளை எட்டி 4-ஆவது இடத்தில் தொடா்கிறாா். அதேபோல், முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் 592 புள்ளிகளுடன் முதல் முறையாக 33-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் அடித்த ஜோ பா்ன்ஸ், கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 50 இடங்களுக்குள் வந்து 48-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

இந்திய வீரா்களைப் பொருத்தவரை முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஓரிடம் முன்னேறி 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். அடுத்த இடத்தில் ஜஸ்பிரீத் பும்ரா இருக்கிறாா். ஆல்-ரவுண்டா் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3-ஆவது இடத்திலேயே நீடிக்கிறாா். அவா் முதல் டெஸ்டில் விளையாடவில்லை.

பௌலா்கள் பிரிவில் ஆஸ்திரேலிய வீரா் பேட் கம்மின்ஸ் 6 புள்ளிகள் பெற்று 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறாா். ஜோஷ் ஹேஸில்வுட் 4 இடங்கள் முன்னேறி 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.