சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

2-வது டெஸ்ட்: இந்திய அணியில் நான்கு மாற்றங்கள், ஷுப்மன் கில், சிராஜ் அறிமுகம்!

ஷுப்மன் கில், சிராஜ் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிறார்கள்.

News image
ஷுப்மன் கில்
Updated On :25 டிசம்பர் 2020, 6:25 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாற்றங்களுடன் இந்திய அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில், சிராஜ் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.

2-வது டெஸ்ட் நாளை முதல் மெல்போர்னில் தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

இந்நிலையில் 2-வது டெஸ்டுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இடம்பெற்ற பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். விராட் கோலி இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். காயம் காரணமாக ஷமி இடம்பெறவில்லை. சஹாவுக்குப் பதிலாக ரிஷப் பந்த், 2-வது டெஸ்டுக்கான விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஜடேஜா மீண்டும் இடம்பிடித்துள்ளார். பேட்ஸ்மேன் ஷுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிறார்கள். 

2-வது டெஸ்டுக்கான இந்திய அணி

மயங்க் அகர்வால்
ஷுப்மன் கில்
புஜாரா (துணை கேப்டன்)
ரஹானே (கேப்டன்)
விஹாரி
ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
ஜடேஜா
அஸ்வின்
உமேஷ் யாதவ்
பும்ரா
சிராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.