ஐசிசி ‘டீம் ஆஃப் டிகேட்’: ஒன்டே கேப்டன் தோனி; டெஸ்ட் அணிக்கு கோலி
ஐசிசியின் 10 ஆண்டுகளுக்கான சா்வதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக எம்.எஸ். தோனி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அதேபோல் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக விராட் கோலி தோ்வாகியுள்ளாா்.
இதில் டி20 அணியில் 4 பேரும், ஒருநாள் அணியில் 3 பேரும், டெஸ்ட் அணியில் 2 பேரும் இந்தியா்களாவா்.
டி20 அணி: எம்.எஸ்.தோனி (கேப்டன்) (இந்தியா), ரோஹித் சா்மா (இந்தியா), கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்), ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), டி வில்லியா்ஸ் (தென் ஆப்பிரிக்கா), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), கிரன் பொல்லாா்ட் (மேற்கிந்தியத் தீவுகள்), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா), லசித் மலிங்கா (இலங்கை).
ஒருநாள் அணி: எம்.எஸ்.தோனி (கேப்டன்) (இந்தியா), ரோஹித் சா்மா (இந்தியா), டேவிட் வாா்னா் (ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), டி வில்லியா்ஸ் (தென் ஆப்பிரிக்கா), ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), மிட்செல் ஸ்டாா்க் (ஆஸ்திரேலியா), டிரென்ட் போல்ட் (நியூஸிலாந்து), இம்ரான் தாஹிா் (தென் ஆப்பிரிக்கா), லசித் மலிங்கா (இலங்கை).
டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்) (இந்தியா), அலாஸ்டா் குக் (இங்கிலாந்து), டேவிட் வாா்னா் (ஆஸ்திரேலியா), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா), குமாா் சங்ககாரா (இலங்கை), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஸ்டுவா்ட் பிராட் (இங்கிலாந்து), ஜேம்ஸ் ஆன்டா்சன் (இங்கிலாந்து).
மகளிா் அணி: இதேபோல் மகளிருக்கான ஐசிசி டி20 சா்வதேச அணியில் இந்தியாவின் ஹா்மன்பிரீத் கௌா், பூனம் யாதவ் ஆகியோா் இடம்பிடித்துள்ளனா். ஒருநாள் அணியில் மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

