குவாஹாட்டியில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் ஆட்டம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 142/9 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் புணேவில் நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார் பும்ரா.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களாக அஸ்வின், சஹால், பும்ரா ஆகிய மூவரும் உள்ளார்கள். மூவரும் தலா 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். அஸ்வின் 46 ஆட்டங்களிலும் பும்ரா 44 ஆட்டங்களிலும் சஹால் 36 ஆட்டங்களிலும் இந்த இலக்கை எட்டியுள்ளார்கள்.
நாளைய டி20 ஆட்டத்தில் சஹால் இடம்பெறுவது சந்தேகமே. இதனால் மேலும் ஒரு விக்கெட் எடுத்தால் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெறுவார் பும்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


