

டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி, 5-ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.
எனினும் டி20 ஆட்டங்களில் அதிக வெற்றிகளைப் பெற்று அதிக வெற்றி விகிதத்துடன் முதல் இடத்தில் இருப்பது இந்தியா தான்.
வெற்றிகரமான டி20 அணிகள்
வெற்றி% (வெற்றி - தோல்வி விகிதம்)
62.79 - இந்தியா (1.84)
61.07 - பாகிஸ்தான் (1.60)
60.00 - தென் ஆப்பிரிக்கா (1.53)
53.28 - ஆஸ்திரேலியா (1.20)
50.88 - இங்கிலாந்து (1.12)
50.00 - நியூஸிலாந்து (1.05)
47.62 - இலங்கை (0.94)
44.54 - மேற்கிந்தியத் தீவுகள் (0.85)
32.61 - வங்கதேசம் (0.50)
டி20 தொடர்களில் பெரும்பாலும் 3 ஆட்டங்கள் தான் நடைபெறும். இதில் இந்திய அணி ஒரு தொடரில் மட்டுமே தோற்றுள்ளது.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் இந்திய அணி
விளையாடிய தொடர்கள் - 15
வெற்றி - 13
தோல்வி - 1
டிரா - 1
2019-ல் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தோற்றது தான் இந்திய அணியின் ஒரே தோல்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.