3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தவானுக்கு அடுத்த சிக்கல்!

ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் நியூஸிலாந்துக்கு செல்வது தற்போது சிக்கலாகியுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2020, 3:16 pm

DIN


ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் நியூஸிலாந்துக்கு செல்வது தற்போது சிக்கலாகியுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 3வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் பீல்டிங் செய்யும்போது இந்திய அணியின் ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மேற்கொண்டு பீல்டிங் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து, பேட்டிங்கிலும் அவர் களமிறங்கவில்லை. கேஎல் ராகுலே மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இந்திய அணி பேட்டிங்கைத் துவங்கிய பிறகு தவான் குறித்த அறிவிப்பு எதையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

ஆஸ்திரேலியாவுடனான தொடருக்குப் பிறகு இந்திய அணி நியூஸிலாந்துடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் பெங்களூருவில் இருந்து நாளை காலை (திங்கள்கிழமை) நியூஸிலாந்துக்குப் புறப்படுகின்றனர். இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவானும் இடம்பெற்றுள்ளார்.

எனவே, இந்தக் காயம் காரணமாக டி20 தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து செல்வதில் தவானுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.