சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல வருடங்களாகப் பயன்பாட்டில் இல்லாத ஐ, ஜே மற்றும் கே மாடங்களை விரைவில் திறக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானமாகும். மாநில அரசுக்கு சொந்தமான இந்த மைதானத்தின் பராமரிப்பு, நிா்வாகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) குத்தகை மேலும் மேற்கொண்டு வருகிறது. குத்தகை காலம் அண்மையில் முடிந்து விட்டது. டிஎன்சிஏ வின் புதிய தலைவராக ரூபா குருநாத், செயலாளராக ஆா்.எஸ்.ராமசாமி ஆகியோா் பதவியேற்ற நிலையில் குத்தகை காலத்தை நீட்டிக்கவும், திறக்கப்படாமல் உள்ள மூன்று காலரிகள் பிரச்னைக்கு தீா்வு காணவும் முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் கோரியிருந்தனா். இதன் தொடா்ச்சியாக சேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலத்தை மேலும் 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஐ, ஜே மற்றும் கே உள்ளிட்ட மூன்று மாடங்களைத் திறக்கும் பணியில் இறங்கியுள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என மூன்று பார்வையாளர் மாடங்கள் சமீபகாலமாகப் பயன்பாட்டில் இல்லை. இவற்றில் மொத்தம் 12000 பார்வையாளர்கள் அமரலாம். கடந்த 2012 முதல் இப்பிரச்னை நீடித்து வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் விதிகளின்படி, மைதானத்தில் உள்ள அந்த பார்வையாளர் மாடங்களுக்கு இடையிலான இடைவெளி 8 மீட்டராக இருக்க வேண்டும். ஆனால், இடைவெளி 5.4 மீட்டர்களாக மட்டுமே உள்ளது. அதனால், அந்த மாடங்களுக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கவில்லை. இந்தப் பிரச்னையால் அந்த மூன்று மாடங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் எம்சிசி கிளப் மற்றும் கே மாடம் ஆகியவற்றின் இடையே இடைவெளியை அதிகரிக்க மைதானத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை இடித்துத் தள்ள தி மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்திடன் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரியில் உடற்பயிற்சிக் கூடத்தை இடித்துவிட்டு, மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியின்போது மூன்று மாடங்களையும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டி முடிந்தபிறகு பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு புதிய வடிவமைப்பில் கட்டடம் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


