ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கேப்ரியல் சேர்ப்பு!

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது.

News image
Updated On :3 ஜூலை 2020, 4:57 am

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மே.இ. தீவுகள் அணியில் ஷன்னான் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால் ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்குச் செல்ல அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக 25 மே.இ. தீவுகள் வீரர்களும் 11 நிர்வாகிகளும் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்கள். அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கும் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் கரோனா டெஸ்ட் பரிசோதனை நடைபெற்றது. அனைவரின் முடிவுகளும் நெகடிவ் என வந்துள்ளது. லண்டனில் வசிக்கும் மே.இ. தீவுகள் பயிற்சியாளர் பில் சிமன்ஸ், அணியினருடன் இணைந்துகொண்டுள்ளார். அனைவரும் எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்டில் மூன்று வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கூடவே பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட மே.இ. தீவுகள் அணியில் ஷன்னான் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளார். தனது உடற்தகுதியை நிரூபித்தது மட்டுமல்லாமல் இரு பயிற்சி ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்துவீசியதால் அணியில் இடம்பிடித்துள்ளார்.

2012-ல் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான கேப்ரியல் இதுவரை 45  ஆட்டங்களில் விளையாடி 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.