2-வது டெஸ்ட், 4-ம் நாள் உணவு இடைவேளை: மே.இ.தீவுகள் 118/2

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது.
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டரில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 469 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை டிக்ளேர் செய்தது. 

தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 6 ரன்களுடனும், நைட் வாட்ச்மேன் அல்சாரி ஜோசப் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 3-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. பிராத்வைட்டும், ஜோசப்பும் ஆட்டத்தைத் தொடங்கினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஜோசப் 32 ரன்களுக்கு பெஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு பிராத்வைட்டுடன், ஷை ஹோப் இணைந்தார். இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி உணவு இடைவேளை வரை விக்கெட்டைப் பறிகொடுக்காமல் விளையாடியது.

4-ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்த அணி இன்னும் 351 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

பிராத்வைட் 41 ரன்களுடனும், ஹோப் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com