வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மே.இ. தீவுகள்

​இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
​இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. (கோப்புப்படம்)
Updated On :26 ஜூலை 2020, 12:26 pm

DIN


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்திருந்தது. ஹோல்டர் 24 ரன்களுடனும், டௌரிச் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. சிறிது நேரம் தாக்குப்பிடித்து நன்றாக விளையாடிய ஹோல்டர் 46 ரன்களுக்கு பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். கார்ன்வால் மற்றும் ரோச் முறையே 10 மற்றும் 0 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு கடைசி விக்கெட்டாக டௌரிச் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 6 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் வோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 172 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியது. 3-வது நாள் ஆட்டம் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.