3-வது டெஸ்ட்: மழையால் கைவிடப்பட்டது 4-ம் நாள் ஆட்டம்

​இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.
​இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. (புகைப்படம்: ஐசிசி | ட்விட்டர்)
​இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. (புகைப்படம்: ஐசிசி | ட்விட்டர்)


இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 111.5 ஓவர்களில் 369 ரன்கள் எடுத்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் முன்னிலை பெற்றது. பிறகு தனது 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. இதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

3-ம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 2 ரன்களுடனும், ஹோப் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) 4-ம் நாள் ஆட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி எதிர்பார்த்துபோல் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், இன்றைய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்றைய நிலையிலிருந்தே மேற்கிந்தியத் தீவுகள் அணி 5-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கவுள்ளது. 5-ம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆட்டமிழக்காமல் தாக்குப்பிடித்து போட்டியை டிரா செய்தால், விஸ்டன் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும். அதேசமயம், இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்ற 5-ம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com