தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரெய்னாவை ஆரத்தழுவி வரவேற்ற தோனி: இது சிஎஸ்கேவின் குடும்பக் கதை (விடியோ)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை கேப்டன் தோனி ஆரத்தழுவி வரவேற்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :3 மார்ச் 2020, 2:50 pm

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை கேப்டன் தோனி ஆரத்தழுவி வரவேற்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதை முன்னிட்டு ஐபிஎல் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி திங்கள்கிழமை சென்னை வந்து பயிற்சியைத் தொடங்கினார். இந்த வரிசையில் சென்னையின் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னாவும் சென்னை வந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இவரை தோனி ஆரத்தழுவி வரவேற்றுள்ளார். இதுதொடர்பான விடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இது விக்ரமனின் படம் என்று குறிப்பிட்டு, "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" என்ற பாடல் வரியும் இணைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தோனி சென்னை வந்த விடியோவும் பயிற்சியில் ஈடுபட்ட விடியோவும் சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.